இந்தியா

ஜம்மு காஷ்மீர் கடைசி கட்ட தேர்தல்: 5 மணிவரை 65.48 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2024-10-01 06:38 IST   |   Update On 2024-10-01 19:57:00 IST
2024-10-01 01:50 GMT

ஜம்மு காஷ்மீர் இறுதி கட்ட தேர்தல்: ஜனநாயக விழாவை வெற்றி பெறச் செய்யுங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள்.

2024-10-01 01:49 GMT

ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் தேர்தல் குறுித்து கூறுகையில் "10 வருடத்திற்குப் பிறகு தேர்தல் நடக்கிறது. சட்டப்பிரிவு 370 உள்பட இங்குள்ள அனைத்து பிரச்சனைகளும் எல்லோருக்கும் தெரியும். கடந்த 10 வருடங்களாக நிலவும் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். என்னைப் பொறுத்தவரை வேலையில்லாத் திண்டாட்டம்தான் மிகப்பெரிய பிரச்சினை என்று நினைக்கிறேன்" என்றார்.

2024-10-01 01:33 GMT

ஜம்மு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே வாக்காளர்கள் அதிக அளவில் திரண்டிருந்த காட்சி.

2024-10-01 01:29 GMT

உதம்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிங்க் வாக்குமையம். பெண்கள் அதிக அளவில் திரண்டு வந்து வாக்களிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் பிங்க் வாக்குமையத்தை ஏற்படுத்தியுள்ளது.

2024-10-01 01:23 GMT

பாஹு தொகுதிக்கு உட்பட்ட காந்தி நகரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பிங்க் வாக்கு மையம்

2024-10-01 01:22 GMT

ஜம்மு காஷ்மீரில் இன்று கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்க இருக்கும் நிலையில் பாஹு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் விக்கரம் ரந்தவா கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

2024-10-01 01:13 GMT

வாக்கு எந்திரங்கள் சரியாக வேலை செய்கிறதா? தேர்தல் அதிகாரிகள் மாதிரி வாக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் காட்சி.

2024-10-01 01:12 GMT

25-ந்தேதி நடைபெற்ற 2-வம் கட்ட தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பதிவாகின.

2024-10-01 01:11 GMT

18-ந்தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 24 தொகுதிகளில் 61.13 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

2024-10-01 01:10 GMT

ஜம்மு மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும், சம்பா மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும், கத்துவா மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும், உதம்பூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது.

பாரமுல்லா மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும், பந்திபோரா மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும், குப்வாரா மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது.

Similar News