இந்தியா

துணை ஜனாதிபதி தேர்தல்: ஆதரவு கேட்ட பட்நாவிஸ்க்கு சரத் பவார் அளித்த நச் பதில்..!

Published On 2025-08-22 16:19 IST   |   Update On 2025-08-22 16:19:00 IST
  • என்.டி.ஏ. வேட்பாளர் எங்களுடைய சித்தாந்தத்துடன் ஒத்துப்போகவில்லை.
  • அவர் ஜார்க்கண்ட் கவர்னராக இருந்தபோது, முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

துணை ஜனாதிபதி தேர்தலில் என்.டி.ஏ. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ் கேட்டுக்கொண்ட நிலையில், தனது கோரிக்கையை ஏற்க முடியாத இயலாமையை (வாக்களிக்க முடியாது) வெளிப்படுத்தியதாக தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு என்டிஏ-வை விட குறைவான எம்.பி.க்கள் மட்டுமே இருந்தபோதிலும், அதனால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.

எதிர்க்கட்சிகளின் அனைத்து வாக்குகளும் சுதர்சன் ரெட்டிக்கு செல்லும். அதன்மூலம் பலம் தெரியவரும். நாங்கள் எந்தவொரு ஆச்சர்யத்தையும் எதிர்பார்க்கவில்லை.

என்.டி.ஏ. வேட்பாளர் எங்களுடைய சித்தாந்தத்துடன் ஒத்துப்போகவில்லை. அவர் ஜார்க்கண்ட் கவர்னராக இருந்தபோது, முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அவர் கவர்னரை சந்தித்தபோது கைது செய்யப்பட்டார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்கு இது தெளிவான உதாரணம். அத்தகைய வேட்பாளருக்கு ஆதரவை எதிர்பார்ப்பது பொருத்தமானது அல்ல. எனவே, முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்க முடியாத எனது இயலாமையை நான் வெளிப்படுத்தினேன்.

இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

Tags:    

Similar News