இந்தியா

கேரளாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் காங்கிரஸ் மந்திரிக்கு சம்மன்

Published On 2023-04-11 05:17 GMT   |   Update On 2023-04-11 05:17 GMT
  • வருகிற 20-ந் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.
  • சிவகுமார் தனது சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் என அமலாக்க துறையினர் கூறியுள்ளனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேவசம் போர்டு மந்திரியாக இருந்த வர் சிவகுமார்.

மந்திரி பதவியில் இருந்தபோது சிவகுமார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சிவகுமார் வருகிற 20-ந் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.

அப்போது சிவகுமார் தனது சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் என அமலாக்க துறையினர் கூறியுள்ளனர்.

இதே குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு சிவகுமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News