இந்தியா

நோயை கண்டுபிடிக்க டாக்டருக்கு உதவிய வேலைக்கார பெண்

Published On 2024-06-15 09:56 IST   |   Update On 2024-06-15 09:56:00 IST
  • எனது குடும்பத்தில் ஒருவருக்கு திடீரென சளி, சோர்வு மற்றும் மூட்டு வலி ஏற்பட்டது. கூடவே சொறி பாதிப்பும் இருந்ததோடு காய்ச்சலும் விட்டு விட்டு வந்தது.
  • கொரோனா, டெங்கு வரை பல சோதனைகள் செய்த பிறகும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கேரளாவை சேர்ந்தவர் டாக்டர் சைரியாக் அப்பி பிலிப்ஸ். இவரது உறவினர் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு என்ன பாதிப்பு என்பதை கண்டுபிடிப்பதற்காக ஏராளமான மருத்துவ பரிசோதனைகள் செய்துள்ளார். ஆனாலும் டாக்டர் பிலிப்சால் அவரது உறவினருக்கு என்ன நோய் பாதிப்பு என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் திணறிய நிலையில் நோயை கண்டுபிடிக்க அவரது வீட்டு வேலைக்கார பெண்ணின் அனுபவ பாடம் உதவி செய்துள்ளது.

இதுகுறித்து டாக்டர் பிலிப்ஸ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

எனது குடும்பத்தில் ஒருவருக்கு திடீரென சளி, சோர்வு மற்றும் மூட்டு வலி ஏற்பட்டது. கூடவே சொறி பாதிப்பும் இருந்ததோடு காய்ச்சலும் விட்டு விட்டு வந்தது. அவருக்கு எந்த பாதிப்பு என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. வைரஸ் ஹெபடைடிஸ் முதல் கொரோனா, டெங்கு வரை பல சோதனைகள் செய்த பிறகும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மிகவும் குழம்பி போனோன். அப்போது வீட்டில் வேலை செய்யும் மூதாட்டி ஒருவர் வந்தார். அவர் தனது பேரக்குழந்தைகளுக்கும் இது போன்று சொறி இருப்பதாகவும், இதனை அவர்கள் ஒரு அஞ்சம்பாணி என்று அழைப்பார்கள் எனவும் கூறினார்.

அவர் சொன்னது போலவே அதற்கான பரிசோதனை செய்த போது எனது உறவினருக்கு அஞ்சம்பாணி பாதிப்புதான் உறுதியானது. 17 ஆண்டு மருத்துவ துறையில் அனுபவம் கொண்ட என்னால் கண்டுபிடிக்க முடியாததை எனது வீட்டில் வேலை செய்யும் பெண் 10 நொடியில் கண்டுபிடித்து விட்டார் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News