இந்தியா

சோனியா காந்தி

நேஷனல் ஹெரால்டு வழக்கு - சோனியா காந்தி 21-ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

Published On 2022-07-11 11:51 GMT   |   Update On 2022-07-11 11:51 GMT
  • வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அவகாசம் வழங்க சோனியா காந்தி கோரியிருந்தார்.
  • வரும் 21ம் தேதி சோனியா காந்தி ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி:

நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 8-ம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால், சோனியாகாந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்நிலையில், ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

Tags:    

Similar News