இந்தியா

குவாட் மாநாட்டில் பங்கேற்க வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்கா பயணம்

Published On 2025-06-30 02:46 IST   |   Update On 2025-06-30 02:51:00 IST
  • மாநாட்டில் பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
  • இந்த மாநாட்டில் இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்தார்.

புதுடெல்லி:

குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு ஜூலை ஒன்றாம் தேதி நடைபெறும் என அமெரிக்கா அறிவித்தது.

இதுதொடர்பாக, வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட், மாநாட்டில் பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். இதற்காக ஜூன் 30-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை அவர் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறார் என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News