இந்தியா

துவாரகா சங்கராச்சாரியார்

துவாரகா சங்கராச்சாரியார் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்

Published On 2022-09-12 00:19 IST   |   Update On 2022-09-12 00:19:00 IST
  • துவாரகா சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி காலமானார்.
  • சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

போபால்:

மத்தியபிரதேச மாநிலம் துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி காலமானார். அவருக்கு வயது 98.

நரசிங்பூர் மாவட்டம் ஜோதேஷ்வர் தாமில் உள்ள அவரது ஆசிரமத்தில் அவர் மறைந்தார். உயிர் பிரிந்தபோது அவரைச் சுற்றி சீடர்கள் நின்றிருந்தனர். சங்கராச்சாரியார் மறைந்த செய்தியை அறிந்தவுடன், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஆசிரமத்துக்கு திரண்டு வந்தனர். சங்கராச்சாரியார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

துவாரகா சங்கராச்சாரியாருக்கு வெளிநாடுகளிலும் பக்தர்கள் உள்ளனர். அவரது இறுதிச்சடங்குகள் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில், துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த சோகமான தருணத்தில் அவரைப் பின்பற்றுவோருக்கு எனது இரங்கல்கள், ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News