இந்தியா

பெட்ரோலுக்கு எத்தனால்: டீசலுக்கு புதிய திட்டம்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

Published On 2025-09-11 17:52 IST   |   Update On 2025-09-11 17:52:00 IST
  • பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுவதால் வாகன மைலேஜ் குறைந்துவிட்டதாக புகார்
  • டீசலுடன் எத்தனாலை கலக்கும் திட்டம் தோல்வியடைந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது. 2014-ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் வெறும் 1.5% உடன் தொடங்கிய நிலையில், 2022 ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. தற்போது பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது.

ஒரு லிட்டர் எரிபொருளில் 800 மில்லி லிட்டர் பெட்ரோல் 200 மில்லி லிட்டர் எத்தனால் கலந்து விற்கப்படுவதால் (E 20) வாகன மைலேஜ் குறைந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உயிரி எரிசக்தி மாநாட்டின் உரையாற்றிய நிதின் கட்கரி, "டீசலுடன் எத்தனாலை கலக்கும் திட்டம் தோல்வியடைந்ததால், தற்போது டீசலுடன் ஐசோபியூடனாலை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பிற்கு எதிரான கருத்துக்கள், தனக்கு எதிராக பணம் கொடுத்து திட்டமிட்டு நடக்கும் பரப்புரை என விமர்சித்தார்.

Tags:    

Similar News