இந்தியா

இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 81 சதவீதமாக உயர்வு- தர்மேந்திர பிரதான் தகவல்

Published On 2025-09-10 08:29 IST   |   Update On 2025-09-10 08:29:00 IST
  • எழுத்தறிவு என்பது வாசிப்பு மற்றும் எழுதுதலைத் தாண்டிச் செல்கிறது.
  • இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் கடந்த 2011-ம் ஆண்டு 74 சதவீதமாக இருந்தது.

புதுடெல்லி:

சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி மூலம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், 'எழுத்தறிவு என்பது வாசிப்பு மற்றும் எழுதுதலைத் தாண்டிச் செல்கிறது. இது கண்ணியம், அதிகாரமளித்தல் மற்றும் தன்னம்பிக்கைக்கான ஒரு வழியாகும். இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் கடந்த 2011-ம் ஆண்டு 74 சதவீதமாக இருந்த நிலையில், 2023-24-ம் ஆண்டில் 80.9 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. அந்தவகையில் கடந்த 13 ஆண்டுகளில் இந்த விகிதம் அதிகரித்து உள்ளது' என குறிப்பிட்டார்.

அதேநேரம் ஒவ்வொரு குடிமகனுக்கும் எழுத்தறிவு ஒரு யதார்த்தமாக மாறும்போதுதான் உண்மையான முன்னேற்றம் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News