இந்தியா

தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் நியமனம்

Published On 2022-08-14 17:59 GMT   |   Update On 2022-08-14 17:59 GMT
  • மகாராஷ்டிர அரசின் மந்திரிசபையில் 18 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
  • துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு உள்துறை மற்றும் நிதித்துறை ஒதுக்கப்பட்டது.

மும்பை:

மகாராஷ்டிர மாநில முதல் மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்று 2 மாதங்களை நெருங்கியுள்ளது.

இதற்கிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிர மாநில அரசின் மந்திரிசபை விரிவாக்கம் நடந்தது. அதில் 18 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநில முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தேவேந்திர பட்னாவிஸ் - உள்துறை மற்றும் நிதித்துறை

ராதாகிருஷ்ண விகே பாட்டீல்- வருவாய்த்துறை

சுதிர் முங்கந்திவார் - வனத்துறை

சந்திரகாந்த் பாட்டீல் - உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை. கூடுதலாக பாராளுமன்ற விவகாரங்களையும் கவனிப்பார்.

தீபக் கேசர்கர் (ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா) - பள்ளிக் கல்வித் துறை

அப்துல் சத்தார் - வேளாண்மைத் துறை

நகர்ப்புற மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட மேலும் 11 அமைச்சகங்கள் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கும், தேவேந்திர பட்னாவிஸ் திட்ட அமைச்சகத்தையும் கூடுதல் பொறுப்பாக கையாளுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News