இந்தியா

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் காலமானார்

Published On 2025-08-05 14:13 IST   |   Update On 2025-08-05 14:13:00 IST
  • ஜம்மு காஷ்மீரின் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் உடல்நலக் குறைவால் காலமானார்.
  • 2018- 19-ம் காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கவர்னராக பதவி வகித்தார்.

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் கவர்னரான சத்யபால் மாலிக் உடல்நலக் குறைவால் காலமானார் என டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சத்யபால் மாலிக். இவர் பாரதிய கிராந்தி தள், ஜனதா தள், இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து மக்கள் பணியாற்றியிருக்கிறார்.

2018- 19-ம் காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கவர்னராக பதவி வகித்தார்.

Tags:    

Similar News