இந்தியா
10 துறைகளுக்கு அமைச்சராகும் அதிஷி
- ஏற்கனவே 8 துறைகளுக்கு அமைச்சராக இருக்கிறார்
- தற்போது நிதி உள்பட மேலும் இரண்டு துறைகளுக்கு பொறுப்பேற்க இருக்கிறார்
டெல்லி மாநிலத்தில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர ஜெயின் ஆகியோர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால் அதிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இந்த நிலையில் மந்திரி சபையை மாற்றியமைக்க கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.
அதிஷியிடம் நிதி, திட்டம் மற்றும் வருவாய்த்துறைகளை கூடுதலாக வழங்க இருக்கிறார்.
இதற்கு முன் அதிஷி 1. மின்சாரம், 2. கல்வி, 3. கலை, 4. கலாச்சாரம் மற்றும் மொழி, 5. சுற்றுலா, 6. உயர்க்கல்வி, 7. பயிற்சி மற்றும் தொழில்நுட்ப கல்வி, 8. மக்கள் தொடர்பு ஆகிய 8 துறைகளை கையில் வைத்திருக்கிறார்.
தற்போது இந்த இரண்டு துறைகளுடன் 10 துறைகளுக்கு அமைச்சராக இருக்கப்போகிறார்.