இந்தியா

ராஜ்நாத்சிங் (கோப்பு படம்)

தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க மத்திய அரசு முடிவு

Published On 2022-06-07 01:25 GMT   |   Update On 2022-06-07 01:25 GMT
  • இந்தியக் கடற்படைக்கு, அடுத்த தலைமுறைக்கான ஆயுதங்கள் வாங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
  • இந்த நடவடிக்கை வெளிநாட்டுச் செலவுகளை கணிசமாகக் குறைக்க உதவும்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் கவுன்சிலின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் ரூ.76,390 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்திய ராணுவத்திற்கான பல்வேறு வாகனங்கள், பீரங்கிகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது நாட்டின் பாதுகாப்பு தளவாட தயாரிப்பு தொழிலுக்கு ஊக்கமளிப்பதுடன், வெளிநாட்டுச் செலவுகளை கணிசமாகக் குறைக்கவும் உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியக் கடற்படைக்கு, அடுத்த தலைமுறைக்கான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கும் ரூ.36,000 கோடி மதிப்பிலான பரிந்துரைகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News