இந்தியா

ஓடும் காரில் ஆபத்தான சாகசம் செய்த வாலிபர்- வீடியோ வைரல்

Published On 2024-05-30 15:42 IST   |   Update On 2024-05-30 15:42:00 IST
  • வீடியோ வைரலாகி 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.
  • வீடியோவை பார்த்த பயனர்கள் வாலிபரின் செயலை கண்டித்ததோடு, தயவு செய்து இவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்கள் சாகசங்களை செய்து அவற்றை வீடியோ எடுத்து பதிவிட்டு வருவது அதிகரித்து வருகிறது. அவற்றில் சில வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

மும்பையில் சாலை ஒன்றில் ஓடும் காரில் வாலிபர் ஒருவர் சாகசம் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், காரின் முன் சீட்டில் இருந்து கதவை திறக்கும் வாலிபர், கார் சென்று கொண்டிருக்கும் போதே கதவு மீது கால் வைத்து காரின் மேற்கூரை மீது ஏறுகிறார். பின்னர் சாலையில் வேகமாக சென்று கொண்டிருக்கும் காரின் மீது நின்று கொண்டு சாகசங்கள் செய்வது போன்று காட்சிகள் உள்ளது.

இந்த வீடியோ வைரலாகி 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. வீடியோவை பார்த்த பயனர்கள் வாலிபரின் செயலை கண்டித்ததோடு, தயவு செய்து இவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். மேலும் சில பயனர்கள் இது போன்ற இளைஞர்களுக்கு அபராதம் விதிப்பதோடு நின்று விடக்கூடாது. அவர்களின் கார்களை பறிமுதல் செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.


Tags:    

Similar News