இந்தியா

10 வயது மகனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்து சூட்கேசில் அடைத்த கொடூர தாய்

Published On 2025-05-13 03:38 IST   |   Update On 2025-05-13 03:38:00 IST
  • தனது குழந்தை டியூஷன் முடிந்து வீடு திரும்பவில்லை என்று தாய் போலீசில் புகார் அளித்தார்.
  • பாசிஷ்டா கோயிலுக்கு அருகிலுள்ள சாலையில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில், தாய் ஒருவர் பெற்ற மகனை தனது காதலுடன் சேர்ந்து கொன்று சூட்கேஸில் அடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உயிரிழந்த 10 வயது சிறுவன் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். தனது குழந்தை டியூஷன் முடிந்து வீடு திரும்பவில்லை என்று தாய் போலீசில் புகார் அளித்தார். சிறுவனின் உடல் பாசிஷ்டா கோயிலுக்கு அருகிலுள்ள சாலையில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது.

தாயின் வாக்குமூலங்களில் சந்தேகம் அடைந்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் அவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது தெரியவந்தது.

மேலும் அப்பெண் தனது காதலுடன் சேர்நது மகனை கொலை செய்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News