இந்தியா
நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது- ராகுலின் வீடியோவை பகிர்ந்து பிரதமருக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி
- நமது குரல் திருடப்பட்டுள்ளது.
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இவற்றை ஆதாரத்துடன் முன்வைத்துள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்கு திருட்டு தொடர்பான ராகுலின் வீடியோவை பகிர்ந்து பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஒவ்வொரு தேசபக்தரான இந்தியரும் இதைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. நமது குரல் திருடப்பட்டுள்ளது. இது மிக தீவிர குற்றச்செயல்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இவற்றை ஆதாரத்துடன் முன்வைத்துள்ளார்.
முதன்முறை என்றபோதிலும், இம்முறை பிரதமராகிய நீங்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் அளிப்பீர்களா?
நாடு தெரிந்து கொள்ள விரும்புகிறது என்று பதிவிட்டுள்ளார்.