இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்வு.. 7 பேர் உயிரிழப்பு

Published On 2025-05-26 15:55 IST   |   Update On 2025-05-26 15:55:00 IST
  • டெல்லியில் மட்டும் 104 பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
  • கோவிட் காரணமாக மகாராஷ்டிராவில் நான்கு இறப்புகள் பதிவாகி உள்ளன.

2020 முதல் உலகளவில் லட்சக்கணக்கான கணக்கான உயிர்களைக் கொன்ற கொரோனா நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

தலைநகர் டெல்லியில் கடந்த வாரத்தில் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.

மத்திய கோவிட்-19 தகவல் அறிக்கையின்படி, நாடு முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை இப்போது 1,009 ஐ எட்டியுள்ளது. டெல்லியில் மட்டும் 104 பாதிப்புகள் உள்ளன, அவற்றில் 99 வழக்குகள் கடந்த வாரத்தில் பதிவாகியுள்ளன.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, கேரளாவில் 430 பேரும், மகாராஷ்டிராவில் 209 பேரும், டெல்லியில் 104 பேரும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் 83, கர்நாடகாவில் 47, உத்தரப்பிரதேசத்தில் 15 மற்றும் மேற்கு வங்காளத்தில் 12 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

கோவிட் காரணமாக மகாராஷ்டிராவில் நான்கு இறப்புகளும், கேரளாவில் இரண்டு இறப்புகளும், கர்நாடகாவில் ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News