இந்தியா

மேரி கோம் சிலை அவரைப் போல இல்லையா?: கணவரின் கருத்தால் எழுந்தது சர்ச்சை

Published On 2022-12-16 02:15 GMT   |   Update On 2022-12-16 02:15 GMT
  • 6 முறை மகளிர் உலகக்குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

இம்பால் :

6 முறை மகளிர் உலகக்குத்துச்சண்டை சாம்பியன் பட்டம், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்று, புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் உள்பட 20 பேருக்கு இப்படி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பூங்கா பற்றி முதல்-மந்திரி பீரன் சிங் தனது 'பேஸ்புக்' பக்கத்தில் குறிப்பிடுகையில், "ஒலிம்பிக் பூங்கா திறப்புக்கு தயாராக உள்ளது. நமது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள நமது புகழ்பெற்ற ஒலிம்பிக் சாதனையாளர்களின் சிலைகளை நாம் பார்க்கலாம்" என தெரிவித்திருந்தார்.

ஆனால் மேரிகோமின் சிலையின் தோற்றம் பற்றி அவரது கணவர் ஆன்லர் கரோங் அளித்த பேட்டி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "ஒலிம்பிக் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள என் மனைவி மேரிகோமின் சிலைத்தோற்றம், அவரைப்போல இல்லை" என தெரிவித்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேரிகோமின் சகோதரர் ஜிம்மி கோம், "இந்த ஒலிம்பிக் பூங்காவை திறந்து வைப்பதற்கு முன்பாக மேரிகோமின் சிலை மாற்றப்படும் என்று முதல்-மந்திரியின் அலுவலகம் எனக்கு உறுதி அளித்துள்ளது" என தெரிவித்தார்.

ஆனால் இதுபற்றி முதல்-மந்திரி அலுவலகத்தில் விசாரித்தபோது, "இந்தப் பிரச்சினை பற்றி நாங்கள் பேச மாட்டோம்" என கூறிவிட்டனர்.

ஆனால் ஜிம்மி கோம் மேலும் கூறும்போது, "இது அவரது (ஆன்லர் கரோங்) தனிப்பட்ட பிரச்சினை. எனது சகோதரி வெளியூர் சென்றிருந்தார். இப்போதுதான் ஊர் திரும்பி உள்ளார். அவருக்கு இந்த விவகாரம் குறித்து புதன்கிழமைதான் தெரிய வந்தது. நமது வீரர்களை, வீராங்கனைகளை கவுரவிக்கிற வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படலாம்" என தெரிவித்தார்.

Tags:    

Similar News