இந்தியா

பீகார் தேர்தலில் காங்கிரஸ்க்கு கடும் சரிவு: 2 இடங்களில் மட்டுமே முன்னிலை..!

Published On 2025-11-14 15:46 IST   |   Update On 2025-11-14 15:46:00 IST
  • கடந்த 2020 தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
  • இந்த தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது. தற்போது 207 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

கடந்த தேர்தலை விட நிதிஷ் குமார் கட்சி (ஐக்கிய ஜனத தளம்) இந்த முறை அதிகமான இடங்களை கைப்பற்றுகிறது. கடந்த முறை 43 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. தற்போது 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை 61 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

கிசான்கஞ்ச் தொகுதியில் முகமது கம்ருல் ஹோடா 19ஆவது சுற்றுக்குப் பிறகு 24,058 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். பாகல்பூர் தொகுதியில் 15 சுற்றுக்குப் பிறகு அஜீத் சர்மா 4797 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

குதும்பா தொகுதியில் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் பின்தங்கிய நிலையில் உள்ளார்.

Tags:    

Similar News