இந்தியா

மாணவர்கள் பைகளில் காண்டம், கத்தி, சீட்டுக்கட்டு: அதிர்ந்து போன பெற்றோர்

Published On 2025-04-08 21:37 IST   |   Update On 2025-04-08 21:37:00 IST
  • பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பைகளில் திடீரென சோதனை நடத்தப்பட்டது.
  • கத்தி, இரும்புச் சங்கிலி, காண்டம் பாக்கெட் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் கோட்டி என்ற பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பைகளில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. அப்போது கத்திகள், இரும்புச் சங்கிலிகள், சைக்கிள் சங்கிலிகள், காண்டம் பாக்கெட்டுகள், சீட்டுக்கட்டுகள் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையறிந்த அந்தப் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடர்பாக, துணை முதல்வர் கூறுகையில், மாணவர்களில் சிலர் போதைப்பொருள்களுக்கு அடிமையாகி இருக்கலாம் என்றும், பள்ளி உள்ளேயே போதைப் பொருட்களை பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுபோல் பல நாட்கள் நடத்திய சோதனையில் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

மாணவர்களின் தவறான நடத்தை மட்டுமின்றி சமூக ஊடகங்களில் காணப்படும் தீய உள்ளடக்கங்களும், தவறான நட்பு வட்டங்களின் பாதிப்புகளும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. கண்டிப்பான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News