இந்தியா

ஆந்திராவில் வாக்குச்சாவடி அருகே மோதல்

Published On 2024-05-13 04:08 GMT   |   Update On 2024-05-13 04:08 GMT
  • ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால், ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
  • மோதல் சம்பவம் அப்பகுதியில் வாக்காளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் ரெண்டல கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

ஒருவரையொருவர் கட்டையால் தாக்கி கொண்டனர். இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டுகள் 2 பேரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மோதல் காரணமாக ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால்,  ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் வாக்காளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Tags:    

Similar News