இந்தியா

என் நேர்மைதான் 52 நாட்கள் ஜெயிலில் தாக்குப் பிடிக்க செய்தது- சந்திரபாபு நாயுடு உருக்கம்

Published On 2023-11-01 04:55 GMT   |   Update On 2023-11-01 04:55 GMT
  • 40 ஆண்டுகால அரசியலில் இதுவரை எந்த தவறையும் செய்தது இல்லை.
  • மற்றவர்கள் தவறு செய்யவும் அனுமதித்தது கிடையாது.

திருப்பதி:

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜ மகேந்திரவரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர ஐகோர்ட்டு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதையெடுத்து நேற்று மாலை சந்திரபாபு நாயுடு ஜெயிலிருந்து வெளியே வந்தார். அவரது மனைவி புவனேஸ்வரி மகன் லோகேஷ் மருமகள் பேரக்குழந்தைகள் வரவேற்பு அளித்தனர்.

மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பின்னர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது :-

எனது ஜாமீனுக்காக போராடிய ஜனசேனா, பி.ஆர்.எஸ், பா.ஜ.க, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய 40 ஆண்டுகால அரசியலில் இதுவரை எந்த தவறையும் செய்தது இல்லை.மற்றவர்கள் தவறு செய்யவும் அனுமதித்தது கிடையாது.

எனது நேர்மையின் காரணமாக ஜெயிலில் 52 நாட்கள் தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆந்திரா தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு மக்கள் என் மீது காட்டிய பாசத்தை விவரிக்க முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News