இந்தியா

குப்பம் தொகுதியில் 250 குடும்பங்களை தத்தெடுத்த சந்திரபாபு நாயுடு

Published On 2025-07-26 16:54 IST   |   Update On 2025-07-26 16:54:00 IST
  • ஆந்திர மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலெக்டர்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை.
  • வறுமையை ஒழிக்கும் திட்டம் குறித்த சுவரொட்டியை வெளியிட்டார்.

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவருடைய குப்பம் தொகுதியில் வசிக்கும் 250 குடும்பத்தினரை தத்தெடுத்துள்ளார்.

ஆந்திர மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலெக்டர்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.

அப்போது வறுமையை ஒழிக்கும் திட்டம் குறித்த சுவரொட்டியை வெளியிட்டார்.

அவர் கூறுகையில்:- நான் குப்பம் தொகுதியில் 250 குடும்பங்களை தத்தெடுக்கிறேன். அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி எனது பொறுப்பு.

வறுமையை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நானே களம் இறங்கி இதனை நடைமுறைப்படுத்துகிறேன். சமூகத்தில் பொருளாதார இடைவெளியை குறைக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதைப்போல மாநிலத்தில் ஏழை குடும்பத்தினரை தத்தெடுக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News