இந்தியா

பேரிடர் நிதி உதவி: தமிழ்நாட்டுக்கு ரூ. 522.43 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்

Published On 2025-04-05 15:00 IST   |   Update On 2025-04-05 15:00:00 IST
  • வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பு, புயல் ஆகியவற்றால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட 4 மாநிலங்களுக்கு 1280.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • பீகாருக்கு 588.73 கோடி ரூபாயும், இமாச்சல பிரதேசத்திற்கு 136.22 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல்.

வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பு, புயல் ஆகியவற்றால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், புதுச்சேரி, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு கூடுதல் மத்திய நிதி உதவியாக 1280.35 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பீகாருக்கு 588.73 கோடி ரூபாயும், இமாச்சல பிரதேசத்திற்கு 136.22 கோடி ரூபாயும், தமிழகத்திற்கு 522.34 கோடி ரூபாயும், புதுச்சேரிக்கு 33.06 கோடி ரூபாயும் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆண்டு இயற்கை பேரிடர்களைச் சந்தித்த பீகார், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுடன் தோளோடுதோள் நின்றதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News