இந்தியா
null

8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு

Published On 2025-05-09 06:28 IST   |   Update On 2025-05-09 06:35:00 IST
  • ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே நேரடி தாக்குதல் தொடங்கியது.
  • இந்திய அரசின் கோரிக்கைகள் மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை.

இந்தியாவில் 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க மத்திய அரசு நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே நேரடி தாக்குதல்கள் தொடங்கியுள்ள நிலையில் எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் நிறுவனம் கூறியதாவது, இந்திய அரசின் நிர்வாக உத்தரவினை ஏற்று இந்தியாவில் உள்ள 8000 எக்ஸ் வலைத்தள கணக்குகளை முடக்கும் பணியில் ஈடுபட்டுளோம்.

ஆனால், இந்திய அரசின் கோரிக்கைகள் மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த தடை உத்தரவுகளால் பாதிக்கப்படும் அனைத்து பயனர்களும் நீதிமன்றங்களிலிருந்து தகுந்த நிவாரணம் பெற நாங்கள் ஊக்குவிக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News