ரூ.62,000 கோடியில் உள்நாட்டு போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் - Tejas Mark-1A பற்றி தெரியுமா?
- இந்திய விமானப்படையின் காலாவதியான MiG-21 ரக விமானங்களுக்கு மாற்றாக இருக்கும்.
- இந்த விமானங்களில் 65%க்கும் அதிகமான பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேஜஸ் LCA (Tejas Light Combat Aircraft ) Mark 1A போர் விமானங்களை வாங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.62,000 கோடி மதிப்பீட்டில் 97 விமானங்களை வாங்க இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் இந்த விமானங்களை தயாரிக்கிறது.
முன்னதாக ஏற்கனவே ரூ. 48,000 கோடி மதிப்பீட்டில் 83, LCA Mark 1A போர் விமானங்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஆர்டர், இந்திய விமானப்படையின் காலாவதியான MiG-21 ரக விமானங்களுக்கு மாற்றாக இருக்கும்.
இந்த புதிய LCA Mark 1A போர் விமானங்கள் மேம்பட்ட ரேடார் மற்றும் மின்னணு அமைப்புகளைக் கொண்டிருக்கும். இந்த விமானங்களில் 65%க்கும் அதிகமான பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
இது உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை மேம்படுத்தும் ஒரு முக்கியமான படியாகும்.