இந்தியா

கார்-லாரி மோதல்- மருத்துவ கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

Published On 2023-02-26 12:11 IST   |   Update On 2023-02-26 12:11:00 IST
  • சின்னசெட்டி பள்ளி அருகே கார் சென்றபோது லாரி மீது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
  • மாணவர்கள் 3 பேரும் காரின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் விகாஸ், கல்யாண், கல்யாண்ராம் இறுதி ஆண்டு படித்து வந்தனர். மாணவர்கள் 3 பேரும் சித்தூரில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றனர்.

அங்கு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு குப்பத்திற்கு காரில் சென்றனர். சின்னசெட்டி பள்ளி அருகே கார் சென்றபோது லாரி மீது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

இதில் மாணவர்கள் 3 பேரும் காரின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். போலீசார் விரைந்து சென்று மாணவர்கள் 3 பேரின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News