இந்தியா
புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.வி.ஆனந்த போஸ்
மேற்கு வங்காளத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்
- இல.கணேசன் மேற்கு வங்காள ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
- புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் விரைவில் பதவியேற்க உள்ளார்
புதுடெல்லி:
மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தங்கர் பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவர் போட்டியிடுவது பற்றி முறைப்படி அறிவிப்பு வெளியானதும், அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மணிப்பூர் ஆளுநரான இல.கணேசன் மேற்கு வங்காள ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆளுநரை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். விரைவில் புதிய ஆளுநர் பதவியேற்க உள்ளார்.