இந்தியா
ஆதார் கார்டு பதிய வீட்டை விட்டு புறப்பட்ட தொழிலதிபர் 2 மகள்களுடன் கால்வாயில் குதித்து தற்கொலை
- இவருக்கு ஜான்வி, ஜியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
- மாலை வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் போலீசில் புகார் அளித்தனர்.
குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம் போரிசனா கிராமத்தை சேர்ந்த தீரஜ் ரபாரி பல பெட்ரோல் பங்களை நடத்தி தொழிலதிபராக இருந்து வந்தார். இவருக்கு ஜான்வி, ஜியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை தனது மகள்களை காரில் அழைத்துக்கொண்டு ஆதார் கார்டு பதிய தீரஜ் ரபாரி வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார்.
மாலை வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், தீரஜ் தனது நண்பருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு மகள்களுடன் நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
மூவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.