இந்தியா

தவறுதலாக எல்லைத் தாண்டிய வீரர்: கைது செய்த பாகிஸ்தான்

Published On 2025-04-24 19:10 IST   |   Update On 2025-04-24 19:10:00 IST
  • பஹல்காம் தாக்குதலால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசடைந்துள்ளது.
  • விசா, சிந்து நதி நீர் நிறுத்தம் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் பி.எஸ்.எஃப். வீரர் பிடிபட்டுள்ளார்.

ஓய்வு எடுப்பதற்காக நிழலைத்தேடி சென்றபோது, தவறுதலாக பாகிஸ்தானில் எல்லைக்குள் சென்றதால் இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. அவர் விடுவிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் எல்லையில் 182ஆவது பட்டாலியனைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பி.கே.சிங் விவசாயிகளுடன் ஓய்வு எடுக்க நிழல் பகுதிக்கு செல்ல முயன்றபோது, இந்திய எல்லையில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றார். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் பி.கே. சிங்கை கைது செய்துள்ளனர்.

யுனிபாஃர்ம் மற்றும் அவருடைய துப்பாக்கியுடன் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றார். பி.கே. சிங்கை பாதுகாப்பாக மீட்க இருநாட்டு வீரர்களிடையே கொடி சந்திப்பு நடைபெற்றது.

இதுபோன்ற சம்பவங்கள் அசாதாரணமானது அல்ல என்றும், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த காலங்களில் நடந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற நிலையில், பயங்கரவாதத்தை ஆதரிப்பாக பாகி்ஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Tags:    

Similar News