இந்தியா

டெல்லி சட்டசபையில் இன்று இரவும் போராட்டத்தை தொடரும் பாஜக எம்எல்ஏக்கள்

Published On 2022-08-30 14:14 GMT   |   Update On 2022-08-30 14:14 GMT
  • ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும்படி பாஜக வலியுறுத்தல்
  • அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் அவைக்காலவர்களால் வெளியேற்றப்பட்டனர்.

புதுடெல்லி:

டெல்லியில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையிலான வார்த்தைப்போர் தீவிரமடைந்துள்ளது. சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்தது. அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். நேற்று விடிய விடிய இரு கட்சிகளின் உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டாவது நாளாக இன்றும் சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மந்திரிகள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். பதிலுக்கு ஆம் ஆத்மி உறுப்பினர்களும் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பாஜக எம்எல்ஏக்கள் அவைக்காலவர்களால் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து சட்டசபை வளாகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் பாஜக எம்எல்ஏக்கள் போராட்டத்தை தொடர உள்ளனர். 

Tags:    

Similar News