இந்தியா

சட்டவிரோத சுரங்க வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பாஜக எம்எல்ஏ தகுதி நீக்கம்!

Published On 2025-05-09 13:27 IST   |   Update On 2025-05-09 13:27:00 IST
  • ஒபுலாபுரம் சுரங்க நிறுவனத்தால் சட்டவிரோதமாக இரும்புத் தாது வெட்டியெடுத்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது.
  • விடுவிக்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் ரெட்டி தேர்தலில் போட்டியிட முடியாது.

கர்நாடக பாஜக எம்எல்ஏ ஜி ஜனார்த்தன் ரெட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சுரங்க வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து கர்நாடக சட்டமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதன் மூலம், கர்நாடக சட்டமன்றத்தின் ஒரு இடம் காலியாகியுள்ளது. ஜனார்த்தன் ரெட்டி கர்நாடகாவின் கங்காவதி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர்.

அவர் நிர்வகித்த ஒபுலாபுரம் சுரங்க நிறுவனத்தால் சட்டவிரோதமாக இரும்புத் தாது வெட்டியெடுத்த வழக்கில் ஜனார்த்தன் ரெட்டி மற்றும் மூன்று பேருக்கு மே 6, 2025 அன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

அந்த தேதியிலிருந்து ரெட்டியின் சட்டமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டது என கர்நாடக சட்டமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் ஜனார்த்தன் ரெட்டி தேர்தலில் போட்டியிட முடியாது.  

Tags:    

Similar News