இந்தியா

பாஜக கூட்டணி 103 இடங்களில் வெற்றி பெற அதிக வாய்ப்பு: அசாம் முதல்வர் ஹிமாந்தா சொல்கிறார்

Published On 2026-01-04 20:36 IST   |   Update On 2026-01-04 20:36:00 IST
  • முன்னதாக இந்த எண்ணிக்கை 90 ஆக இருந்தது.
  • தொகுதி வரையறைக்குப் பின் எண்ணிக்கை 13 முதல் 15 வரை அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலத்துடன் பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் 126 இடங்களில் பாஜக கூட்டணி 103 இடங்களை பிடிக்கும் என அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூகையில் "இந்த நேரத்தில் பாஜக கூட்டணி 103 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. முன்னதாக இந்த எண்ணிக்கை 90 ஆக இருந்தது. தொகுதி வரையறைக்குப் பின் எண்ணிக்கை 13 முதல் 15 வரை அதிகரித்துள்ளது.

நாங்கள் நூறு சதவீத இடங்களை வெல்கிறோமா, 90 அல்லது 80 சதவீத இடங்களுக்குள் சுருங்கிவிடுகிறோமா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்.

இவ்வாறு ஹிமாந்தா சர்மா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் தொகுதி வரையறை 2023-ல் முடிவடைந்தது. மக்களவை மற்றும் சட்டசபை இடங்களின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டன. ஆனால், எண்ணிக்கையில் எந்த பாதிப்பும் இல்லை. 

Tags:    

Similar News