இந்தியா

பெங்களூரு சிவாஜிநகர் மெட்ரோவுக்கு செயின்ட் மேரி பெயர்?- சர்ச்சையை கிளப்பிய சித்தராமையா

Published On 2025-09-11 17:24 IST   |   Update On 2025-09-11 17:24:00 IST
  • பெங்களூரு சிவாஜிநகரில் அமையவிருக்கும் மெட்ரோ நிலையத்திற்கு செயின்ட் மேரி பெயர் வைக்க சித்தராமையாக பரிந்துரை.
  • நேருவின் காலத்திலிருந்தே மராட்டிய வீர மன்னரை அவமதிக்கும் பாரம்பரியத்தை காங்கிரஸ் தொடர்கிறது என பாஜக கண்டனம்.

கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா சிவாஜிநகரில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது சிவாஜிநகரில் வரவிருக்கும் மேட்ரோ நிலையத்திற்கு செயின்ட் மேரி என பெயர் சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளேன் எனத் தெரிவித்திருந்தார். ஏற்கனவே மறைந்த நடிகரும், இயக்குனருமான சங்கர் நாக் பெயரை வைக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், சித்தராமையா இவ்வாறு கூறியிருந்ததற்கு கடும் விமரச்னம் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் பாஜக-வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கர்நாடகா பாஜக தலைவர்கள் மட்டுமல்ல. மகாராஷ்டிரா மாநில தலைவர்கள் கூட, மகாராஜா சிவாஜியை இழிவுப்படுத்துவதாக குற்றம்சாடடியுள்ளனர்.

"சித்தராமையாவின் இந்த பரிந்துரைக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். பெங்களூருவின் சிவாஜிநகர் மெட்ரோ நிலையம் செயின்ட் மேரியாக பெயர் மாற்றுவது சத்திரபதி சிவாஜி மகாராஜாவை இழிவுப்படுத்துவதாகும். 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' என்ற புத்தகத்தில் சிவாஜி மகாராஜாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த நேருவின் காலத்திலிருந்தே மராட்டிய வீர மன்னரை அவமதிக்கும் பாரம்பரியத்தை காங்கிரஸ் தொடர்கிறது.

எல்லாம் வல்ல இறைவன் சித்தராமையாவுக்கு அத்தகைய முடிவை எடுக்காமல் இருக்க புத்தியைக் கொடுக்க வேண்டும்" என மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

சிவாஜிநகர் என்ற பெயரை நீக்குவார்களா? அவர்கள் வரம்பு மீறக்கூடாது. காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்வாக திருப்திப்படுத்தல் மாறிவிட்டது. ஏனென்றால், திருப்திப்படுத்தல் அரசியல் காரணமாக அவர்களின் கட்சி நாய்களிடம் சென்றது. ஆனாலும், அவர்கள் சமாதான அரசியலைப் பேணி வருகின்றனர். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக மாநில சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவர் சல்வாடி நாராயணன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில மேலவை உறுப்பினர் சித்ரா வாக், "சிவாஜி மகாராஜா மீதான காங்கிரசின் வெறுப்பு தற்போது வெளிப்படுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரிஸ்வான் பெங்களூருவில் உள்ள சிவாஜிநகர் மெட்ரோ நிலையத்தின் பெயரை செயின்ட் மேரி நிலையமாக மாற்ற கோரிக்கை வைத்துள்ளார். சித்தராமையா மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மகாராஷ்டிரா காங்கிரஸ் இது குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமா, அல்லது அமைதியாக இருக்குமா?" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News