இந்தியா

ஜாக்கிரதையாக இருங்கள்.. நேபாளின் நிலைமை எந்த நாட்டுக்கும் வரலாம் - மோடிக்கு சஞ்சய் ராவத் நேரடி மெசேஜ்

Published On 2025-09-10 03:30 IST   |   Update On 2025-09-10 03:30:00 IST
  • பிரதமர் ஒலி பதவி விலக போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
  • அவரை அடியொற்றி நாட்டின் ஜனாதிபதியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். நேபாள், கலவரம், சஞ்சய் ராவத்

அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை மேற்கோள் காட்டி, உத்தவ் பிரிவு சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் மத்திய அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செவ்வாயன்று, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்த கலவரங்களின் வீடியோவை எக்ஸ் பக்கத்தில் சஞ்சய் ராவத் பகிர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவை நேரடியாக டேக் செய்தார்.

அந்த பதிவில், "இன்று நேபாளம் இப்படித்தான் இருக்கிறது. இந்த நிலைமை எந்த நாட்டிலும் நிகழலாம். ஜாக்கிரதையாக இருங்கள்! பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்," என்று எழுதியுள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடை மற்றும் அரசின் ஊழலுக்கு எதிராக இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. பிரதமர் ஒலி பதவி விலக போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை அடியொற்றி நாட்டின் ஜனாதிபதியும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.   

Tags:    

Similar News