இந்தியா

ரூ.10 ஆயிரம் லஞ்சம்... பிரசவத்தின் போது உயிரிழந்த பச்சிளங்குழந்தை - மருத்துவமனைக்கு சீல்

Published On 2025-08-23 14:39 IST   |   Update On 2025-08-23 14:39:00 IST
  • முதலில் அறுவை சிகிச்சை தொடங்குங்கள் என்று கூறியதற்கு முழு பணத்தையும் செலுத்த வேண்டும் என்று கூறினர்.
  • அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் மாவட்ட மகளிர் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள்.

பிரசவத்தின் போது இறந்த குழந்தையின் உடலை ஒரு பையில் போட்டு மாவட்ட நிர்வாக அலுவலகத்திற்கு எடுத்து சென்று தந்தை முறையிட்டதால், மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில், பிரசவத்தின்போது இறந்த தனது குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு ஒரு நபர் மாவட்ட நிர்வாக அலுவலகத்திற்கு வந்ததை அடுத்து, மாவட்ட நீதிபதி மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

குழந்தையை இழந்த தந்தையான விபின் குப்தா கூறுகையில், மனைவியை மருத்துவமனையில் சேர்த்தபோது, சுகபிரசவத்திற்கு ரூ.10 ஆயிரமும், அறுவை சிகிச்சைக்கு ரூ.12 ஆயிரமும் மருத்துவமனை நிர்வாகம் கேட்டது. தொடர்ந்து மனைவிக்கு பிரசவ வலி அதிகமான உடனே மாவட்ட நிர்வாகம் கட்டணத்தை உயர்த்திக்கொண்டே சென்றது. நேற்று அதிகாலையில் கொஞ்சம் பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தேன். ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ உங்கள் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யணும் அதனால் முழு பணத்தையும் செலுத்த வேண்டும் என கூறியது. முதலில் அறுவை சிகிச்சை தொடங்குங்கள் என்று கூறியதற்கு முழு பணத்தையும் செலுத்த வேண்டும் என்று கூறினர்.



இதையடுத்து பணத்தை செலுத்திய பிறகு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில் பிறந்த குழந்தை இறந்தது. இதன்பிறகு எனது மனைவியை சாலையில் தூக்கி போட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து, நாங்கள் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரிடம் சென்றோம். பின்னர் நான் மாவட்ட நிர்வாகத்திடம் சென்றேன். அவர் என்னுடன் இங்கு வந்தார். நான் என் இறந்த குழந்தையை ஒரு பையில் சுமந்து கொண்டிருப்பதாக கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறுகையில், பிறந்த குழந்தை இறந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகம் கோல்டர் மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் மாவட்ட மகளிர் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகியின் அறிவுறுத்தலின் பேரில், ADM AK ரஸ்தோகி ஸ்ரீஜன் மருத்துவமனைக்குச் சென்று கர்ப்பிணித் தாயின் நிலை குறித்து விசாரித்தார். சிறந்த சிகிச்சைக்கான வழிமுறைகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் மாவட்ட நிர்வாகம் துணை நிற்கிறது என கூறினார்.

Tags:    

Similar News