இந்தியா

நிலச்சரிவு

இமாசல பிரதேசத்தில் கனமழை - வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலி

Published On 2022-08-20 19:56 IST   |   Update On 2022-08-20 19:56:00 IST
  • இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.
  • தொடர் கனமழையால் சுற்றுலாவாசிகள் உள்பட உள்ளூர்வாசிகளும் சிக்கித் தவிக்கின்றனர்.

சிம்லா:

இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் சுற்றுலாவாசிகள் உள்பட உள்ளூர்வாசிகளும் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, காங்கரா மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த ரெயில்வே பாலம் உடைந்து விழுந்தது. வெள்ளம் வடியாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. வரும் 25-ம் தேதி வரை கனமழை பெய்யும், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இமாசல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும் அடங்குவர். மேலும் காணாமல் போன 5 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாண்டி, சம்பா, காங்ரா, குல்லு, ஹமீர்பூர் மற்றும் சிம்லா மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என மாநில பேரிடர் பொறுப்பு படையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News