இந்தியா

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல்: அசாம் ரைபிள்ஸ் வீரர் உயிரிழப்பு- 3 பேர் காயம்

Published On 2025-09-19 19:21 IST   |   Update On 2025-09-19 19:21:00 IST
  • இம்பாலில் இருந்து பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு வாகனத்தில் செல்லும்போது தாக்குதல்.
  • காயம் அடைந்த மூன்று வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் ஆயுதமேந்திய குழு அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு வீரர் உயிரிழந்த நிலையில், 3 பேர் காயம் அடைந்தனர்.

வீரர்கள் இம்பாலில் இருநது பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆயுதமேந்திய ஒரு கும்பல் திடீரென வானத்தின் மீது தாக்கதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் மாலை 6 மணிக்கு நம்போல் சபால் லெய்கை என்ற இடத்தில் நடந்துள்ளது. இதில் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயம் அடைந்த வீரர்கள் போலீஸ் மற்றும் பொதுமக்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட சண்டை, வன்முறையாக வெடித்தது. இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் மணிப்பூரில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. மணிப்பூர் கலவரத்திற்குப் பிறகு கடந்த வாரம் முதன்முறையாக பிரதமர் மோடி, அம்மாநிலத்திற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News