இந்தியா

கேரளாவில் கம்யூனிஸ்டு தியாகிகள் குறித்து பேராயர் சர்ச்சை கருத்து

Published On 2023-05-22 06:08 GMT   |   Update On 2023-05-22 06:08 GMT
  • பேராயர் ஜோசப் பாம்பிளானியின் இந்த கருத்துக்கு மார்க்சிஸ்டு கட்சியினரும், மூத்த நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
  • ஜோசப் தேவையில்லாத கருத்துக்களை கூறிவருகிறார் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றார்.

திருவனந்தபுரம்:

கேரளாவை சேர்ந்த பேராயர் மார் ஜோசப் பாம்பிளானி. இவர் மத்திய அரசு ரப்பருக்கு உரிய விலை கொடுத்தால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தொகுதியில் வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.

இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ஆளும்கட்சியினர் கொண்டாடும் தியாகிகள் தினத்தில், போலீசுக்கு பயந்து பாலத்தில் இருந்து விழுந்து இறந்தவரெல்லாம் தியாகிகள் ஆக கொண்டாடப்படுகிறார்கள், என்றார்.

பேராயர் ஜோசப் பாம்பிளானியின் இந்த கருத்துக்கு மார்க்சிஸ்டு கட்சியினரும், மூத்த நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மூத்த நிர்வாகி ஜெயராஜன் கூறும்போது, பேராயர் ஜோசப் பாம்பிளானி எப்போதுமே தேவையில்லாத கருத்துக்களை கூறிவருகிறார். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றார்.

Tags:    

Similar News