இந்தியா

இந்தியாவின் பாதுகாப்புத் துறை செயலாளராக அரமனே கிரிதர் நியமனம்

Published On 2022-10-19 15:06 GMT   |   Update On 2022-10-19 15:06 GMT
  • தற்போதைய செயலாளர் அஜய் குமார் பதவிக் காலம் நடப்பு ஆண்டு அக்டோபர் 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
  • வருவாய்த்துறை செயலாளராக சஞ்சய் மல்கோத்ரா நியமனம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவின் அடுத்த பாதுகாப்பு துறை செயலாளர் நியமனம் பற்றி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளராக உள்ள அரமனே கிரிதர், நாட்டின் அடுத்த பாதுகாப்பு துறை செயலாளராக நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு துறை செயலாளராக தற்போது உள்ள அஜய் குமார் பதவிக் காலம் நடப்பு ஆண்டு அக்டோபர் 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து கிரிதர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கிரிதருக்குப் பதிலாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவரான அல்கா உபாத்யாயா புதிய சாலை மற்றும் போக்குவரத்துச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று, வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ் பதவிக்காலம் வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் நிறைவடைகிற சூழலில், நிதியமைச்சகத்தின் நிதி சேவை துறைக்கான செயலாளராக உள்ள சஞ்சய் மல்கோத்ரா, அடுத்து அந்த பதவியை வகிப்பார் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News