சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவரும் மகனை நேரில் சென்று பார்த்த பவன் கல்யாண்
- பவன் கல்யாண் மகன் (வயது 7) சிங்கப்பூரில் படித்து வருகிறார்.
- பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாண் மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண். இவரது மகன் மார்க் ஷங்கர் (7 வயது) சிங்கப்பூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறான். மார்க் ஷங்கர் படித்து வந்த பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் பவன் கல்யாண் மகனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், புகைக் காரணமாக நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகனுக்கு தீக்காயம் ஏற்பட்ட செய்தியை கேட்டதும், உடனடியாக பவன் கல்யாண் சிங்கப்பூர் புறப்பட்டார். சிங்கப்பூர் சென்ற பவன் கல்யாண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மகனை சந்தித்துள்ளார். தற்போது பவன் கல்யாண் மகன் மார்க் ஷங்கர் சீராக குணமடைந்து வருவதாக, அவரது கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்ளட்ளது.
மேலும், தீ விபத்தின்போது புகை உடலுக்குள் சென்றதால், நுரையீரல் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன, மேலும் அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருகிறது.
இன்று காலை எமர்ஜென்சி வார்டில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். டாக்டர்கள் சிறுவனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மெற்கொண்ட பரிசோதனை அடுத்த மூன்று நாட்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" எனவும் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட பவன் கல்யாண், மகன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று மகனை பார்த்துள்ளார்.