இந்தியா

நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

Published On 2023-02-17 06:40 IST   |   Update On 2023-02-17 06:40:00 IST
  • ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5 மணியளவில் கத்ரா நகரில் இருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

Tags:    

Similar News