இந்தியா

VIDEO: மகா கும்பமேளாவில் புனித நீராடிய அமித் ஷா

Published On 2025-01-27 11:57 IST   |   Update On 2025-01-27 13:21:00 IST
  • பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறும்.
  • இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் பிரயாக்ராஜ் நகரில் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' இடத்தில் முதல் நாளில் 1 கோடி பேர் நீராடினர்.

பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறும் கும்பமேளாவில் 40 கோடி பக்தர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று காலை பிரயாக்ராஜ் நகருக்கு சென்றார். கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். பின்னர் அவர் படே அனுமான் கோவில் மற்றும் அபய்வத்தை பார்வையிட்டார்.

ஜூனா அகாராவுக்குச் சென்று மதிய உணவு சாப்பிட்டார். குரு சரணானந்த் ஜி மற்றும் கோவிந்த் கிரி ஜி மகராஜ் ஆகியோரையும் சந்திக்கிறார். மாலையில் அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Tags:    

Similar News