இந்தியா
மக்களவை மூலம் தவறான கருத்துகளை நாடு முழுவதும் பரப்ப முயற்சி: அமித் ஷா குற்றச்சாட்டு
- மதியம் 12 மணி முதல் விவாதம் நடந்து வருவதை நான் கவனமாகக் கேட்டு வருகிறேன்.
- பல உறுப்பினர்களிடையே உண்மையாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ பல தவறான கருத்துக்கள் இருப்பதாக நான் உணர்கிறேன்.
பாராளுமன்ற மக்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது கூறியதாவது:-
அமைச்சரவையின் எனது சக அமைச்சர் அறிமுகப்படுத்திய மசோதாவை நான் ஆதரிக்கிறேன். மதியம் 12 மணி முதல் விவாதம் நடந்து வருவதை நான் கவனமாகக் கேட்டு வருகிறேன்.
பல உறுப்பினர்களிடையே உண்மையாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ பல தவறான கருத்துக்கள் இருப்பதாக நான் உணர்கிறேன்.
மேலும், இந்த அவையின் மூலம் அந்த தவறான கருத்துக்களை நாடு முழுவதும் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.