இந்தியா
null

VIDEO: அமித் ஷா கூட கைது செய்யப்பட்டிருக்கிறார்.. அப்போ?.. கே.சி.வேணுகோபால் கேள்வியால் அமளி துமளி ஆன மக்களவை

Published On 2025-08-21 00:50 IST   |   Update On 2025-08-21 00:51:00 IST
  • 2014-ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றத்தால் அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.
  • இந்த மசோதாவை ஹிட்லரின் கெஸ்டபோ (Gestapo) காவல் அமைப்புடன் ஒப்பிட்டார்.

குற்ற வழக்குகளில் தொடர்ந்து 30 நாட்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தால் பிரதமர் மற்றும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம்செய்யும் மசோதாவை நேற்று மத்திய நேற்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.

அப்போது அவருக்கும் ம் காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபாலுக்கும் இடையே காரசானமான விவாதம் நடைபெற்றது.

மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது பேசிய வேணுகோபால், "அமித் ஷா குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தபோது கைது செய்யப்பட்டார். அப்போது அவர் தார்மீகத்தைக் கடைப்பிடித்தாரா?" என்றுகேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த அமித் ஷா, "போலி வழக்கில் சிக்க வைக்கப்பட்டபோதும், நான் விடுதலையாகும் வரை எந்த ஒரு அரசியல் பதவியிலும் இருக்கவில்லை. நீங்கள் எனக்கு தார்மீகம் கற்றுக்கொடுக்கிறீர்களா?" என்று பதிலடி கொடுத்தார்.

2010-ஆம் ஆண்டு சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட அமித் ஷா குஜராத் உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மூன்று மாதங்கள் சிறையில் இருந்த பிறகு ஜாமீன் பெற்ற அவர், 2014-ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றத்தால் அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, "இந்த மசோதா அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை அழித்து அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்" என்று தெரிவித்தார்.

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, இந்த மசோதாவை ஹிட்லரின் கெஸ்டபோ (Gestapo) காவல் அமைப்புடன் ஒப்பிட்டார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மசோதா நகல்களைக் கிழித்தெறிந்து அமித் ஷாவை நோக்கி வீசினார்.

Tags:    

Similar News