இந்தியா

"உலகளாவிய அமைப்புகளால் வெளியிடப்படும் காற்று தரவரிசைப் பட்டியல் அதிகாரப்பூர்வமானது அல்ல" - மத்திய அரசு!

Published On 2025-12-12 15:30 IST   |   Update On 2025-12-12 15:30:00 IST
  • காற்றுமாசை மதிப்பிடுவதற்கும், தரவரிசைப்படுத்துவதற்கும் சொந்தமாக வருடாந்திர கணக்கெடுப்பை நடத்துகிறது இந்தியா
  • உலக சுகாதார அமைப்பின் (WHO) காற்று தர வழிகாட்டுதல்கள் ஆலோசனைகளாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன

பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்படும் உலகளாவிய காற்று தர தரவரிசை பட்டியல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்றும், உலக சுகாதார அமைப்பின் (WHO) காற்று தர வழிகாட்டுதல்கள் ஆலோசனைகளாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன எனவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.  

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த IQAir நிறுவனத்தின் உலக காற்று தர தரவரிசை, WHO -ன் உலகளாவிய காற்று தர தரவுத்தளம், யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் இணைந்து வெளியிடும் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு (EPI) மற்றும் The Lancet வார இதழின் உலகளாவிய நோய் சுமை (GBD) போன்ற உலகளாவிய குறியீடுகளில் இந்தியாவின் நிலை குறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் இந்த பதிலை அளித்துள்ளது சுற்றுசூழல் அமைச்சகம். 

இந்தியா, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தரத்தைப் பாதுகாப்பதற்காக ஏற்கனவே 12 மாசுபடுத்திகளுக்கான தேசிய சுற்றுப்புற காற்று தர தரநிலைகளை நிறுவியுள்ளதாக சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்தவொரு உலகளாவிய அமைப்பும் நாடுகளை தரவரிசைப்படுத்துதல் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றும், இந்தியா தேசிய தூய்மை காற்று திட்டத்தின் (NCAP) கீழ், 131 நகரங்களில் காற்று மாசை கட்டுபடுத்தி, நகரங்களை மதிப்பிடுவதற்கும், தரவரிசைப்படுத்துவதற்கும் சொந்தமாக வருடாந்திர கணக்கெடுப்பை நடத்துவதாகவும் தெரிவித்தார். 

Tags:    

Similar News