இந்தியா

அக்னிபாத், ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு திட்டங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது: ராகுல் காந்தி

Published On 2022-11-15 08:49 IST   |   Update On 2022-11-15 08:49:00 IST
  • மோடி நாட்டில் வன்முறை மற்றும் வெறுப்பை பரப்ப முயற்சி செய்கிறார்.
  • வெறுப்புக்கு காரணமானவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கின்றனர்.

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஒரு பகுதியாக மராட்டிய மாநிலம் ஹிங்கோலியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் உள்ள 2 அல்லது 3 கோடீஸ்வரர்கள் பயன் அடைவதற்காக " மேட் இன் சீனா" தயாரிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஆதரிக்கிறார். அவர் நாட்டில் வன்முறை மற்றும் வெறுப்பை பரப்ப முயற்சி செய்கிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையோ, அக்னிபாத் திட்டமோ, ஜி.எஸ்.டி.யோ அவர்கள் கொண்டுவரும் அனைத்து கொள்கைகளும் மக்களை பயமுறுத்துகின்றன. வெறுப்பை உருவாக்குகின்றன. இந்த வெறுப்பு சமூகத்தில் பிளவை உண்டாக்குகிறது.

வெறுப்புக்கு காரணமானவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கின்றனர். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாதது தேசபக்தி, தவறான ஜி.எஸ்.டி.கொள்கை ஒரு தேசபக்தி, நாட்டில் வெறுப்பை பரப்புவது தேசபக்தி, 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது தேசபக்தி, வேலையின்மை தேசபக்தி மற்றும் பணவீக்கமும் தேசபக்தி. ஆனால் இது இந்தியாவின் தேசபக்தி இல்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் தேசபக்தி.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Tags:    

Similar News