இந்தியா

தோழியை நம்பி விருந்துக்கு சென்ற இளம்பெண்.. கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

Published On 2025-08-14 22:00 IST   |   Update On 2025-08-14 22:00:00 IST
  • ஆண்கள் 4 பேரும் கழிவறைக்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
  • நாங்கள் பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளோம் என மிரட்டினர்.

டெல்லி குருகிராமில் தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.

இவரின் பெண் நண்பர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அண்டர் ஹில் சாலையில் உள்ள அவருடைய வீட்டில் விருந்து நடப்பதாகவும் அதில் அந்த பெண்ணை கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளார்.

இதனையேற்ற இளம்பெண் அந்த விருந்தில் கலந்து கொள்ள நண்பரின் வீட்டிற்கு சென்றார். அங்கு  4 ஆண்களும் இருந்தனர்.

அனைவரும் மது அருந்தினர். இளம்பெண் அதிகளவில் மது குடித்தார்.

மது போதையில் இருந்த அவரை அங்கிருந்த ஆண்கள் 4 பேரும் கழிவறைக்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

மயக்கம் தெளிந்த பின்னர் இளம்பெண் தான் வன்கொடுமை செய்யப்பட்டதை உணர்ந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அந்த ஆண்களிடம் நடந்த சம்பவம் குறித்து தட்டிக் கேட்டு தகராறு செய்தார்.

அப்போது அவர்கள் நாங்கள் பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளோம். இதுபற்றி போலீசில் புகார் அளிக்க சென்றால் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டினர்.

ஆனால் அந்த பெண் துணிச்சலுடன் இதுகுறித்து டெல்லி போலீசில் புகார் செய்தார்.

சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீசார் சென்ற போது அங்கு யாரும் இல்லை. 4 ஆண்களும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News