இந்தியா

குழந்தையை காப்பாற்றிய ரோந்து பிரிவு காவலர் 

ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்த குழந்தையை மீட்ட காவலர்- பரபரப்பு வீடியோ

Published On 2022-06-14 00:27 IST   |   Update On 2022-06-14 00:27:00 IST
  • ஆட்டோ ஒன்று சாலையில் திரும்பிய போது தாயின் மடியில் இருந்து குழந்தை கீழே தவறி விழுந்தது.
  • குழந்தையின் உயிரை காப்பாற்றிய காவலரை பலர் பாராட்டி வருகின்றனர்

காசிப்பூர்:

உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில்,  வாகன போக்குவரத்தை, ரோந்து பிரிவு காவலர் சுந்தர் சர்மா, சரி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆட்டோ ஒன்று சாலையில் திரும்பிய போது தாயின் மடியில் இருந்து குழந்தை கீழே தவறி விழுந்தது. இதைக் கண்ட போக்குவரத்து காவலர் சுந்தர், விரைந்து சென்று எதிரே வந்த பேருந்தை நிறுத்தினார். பின்னர் அந்த குழந்தையை அவர் மீட்டார். இதனால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இது தொடர்பான வீடியோக் காட்சி சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட நிலையில், பலர் அந்த காவலரை பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News