இந்தியா

டெல்லியில் பரபரப்பு: உள்துறை அமைச்சகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2024-05-22 11:58 GMT   |   Update On 2024-05-22 11:58 GMT
  • டெல்லியின் நார்த் பிளாக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
  • உள்துறை அமைச்சகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியின் நார்த் பிளாக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், உள்துறை அமைச்சகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் டெல்லியின் நார்த் பிளாக் பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் என மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து, போலீசார் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்பு படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக்கில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News